தொய்மையான தமிழ் மொழி. செம்மொழி , கல் தோன்றி மண் தோன்றா காலத்தே தோன்றிய மூத்த மொழி. லடினுகும் ,சமஸ்க்ரிததுகும் மூத்த மொழி என்ற பெயர் பெற்றது. மற்ற நாடுகளில் மொழி பேசும் முன்பு பாடலும் பண்ணும் பேச ,பாட பெற்ற மொழி என்ற பெருமையும் உண்டு. தற்போது தமிழின் நிலைமை எவ்வாறு உள்ளது என்பதே நமது கேள்வி. இப்போது நான் எழுதும் தமிழ் கூட சரியானதுதானா என்பது என் சந்தேகம் .தேவன்ன்கிரி script என்று ஒன்று உண்டு. அது வழக்கில் உள்ளதா என்பதே கேள்விகுறி . சரி நாம் தலைப்புக்கு வருவோம் .தமிழில் ஆங்கிலம் . ஆங்கிலம் என்ற வார்த்தை தமிழ்தான். ஆனாலும் எத்தனை வார்த்தைகள் தமிழில் தலையீட்டி உள்ளது என்பதை நாம் அறிவோமா ? நமது தமிழில் குவளை என்ற அழகான தமிழ் வார்த்தை உள்ளது. ஆனால் தற்போது அது டிப்பர் (dipper) என்றே உரைக்க பட்டு வருகின்றது. மதுரை வழக்கத்தில் அசால்ட் என்ற வார்த்தை உள்ளது அதற்கு அர்த்தம் லேசானது அல்லது சுலபமானது என்று கொள்ளலாம் . அது assault என்ற ஆங்கில வார்த்தையில் இருந்து வந்தது. அதற்கு அர்த்தம் தாக்குதல் என்றே அர்த்தமாகும். கூலி என்றொரு வார்த்தை உண்டு ஆனால் அது தமிழ் வார்த்தை அல்ல என்பது நிறைய பேர