தொய்மையான தமிழ் மொழி. செம்மொழி , கல் தோன்றி மண் தோன்றா காலத்தே தோன்றிய மூத்த மொழி. லடினுகும் ,சமஸ்க்ரிததுகும் மூத்த மொழி என்ற பெயர் பெற்றது. மற்ற நாடுகளில் மொழி பேசும் முன்பு பாடலும் பண்ணும் பேச ,பாட பெற்ற மொழி என்ற பெருமையும் உண்டு.
தற்போது தமிழின் நிலைமை எவ்வாறு உள்ளது என்பதே நமது கேள்வி. இப்போது நான் எழுதும் தமிழ் கூட சரியானதுதானா என்பது என் சந்தேகம் .தேவன்ன்கிரி script என்று ஒன்று உண்டு. அது வழக்கில் உள்ளதா என்பதே கேள்விகுறி .
சரி நாம் தலைப்புக்கு வருவோம் .தமிழில் ஆங்கிலம் . ஆங்கிலம் என்ற வார்த்தை தமிழ்தான். ஆனாலும் எத்தனை வார்த்தைகள் தமிழில் தலையீட்டி உள்ளது என்பதை நாம் அறிவோமா ?
நமது தமிழில் குவளை என்ற அழகான தமிழ் வார்த்தை உள்ளது. ஆனால் தற்போது அது டிப்பர் (dipper) என்றே உரைக்க பட்டு வருகின்றது. மதுரை வழக்கத்தில் அசால்ட் என்ற வார்த்தை உள்ளது அதற்கு அர்த்தம் லேசானது அல்லது சுலபமானது என்று கொள்ளலாம் . அது assault என்ற ஆங்கில வார்த்தையில் இருந்து வந்தது. அதற்கு அர்த்தம் தாக்குதல் என்றே அர்த்தமாகும். கூலி என்றொரு வார்த்தை உண்டு ஆனால் அது தமிழ் வார்த்தை அல்ல என்பது நிறைய பேருக்கு தெரிந்திரிக்க நியாமில்லை. Coolie என்பது வேலைகாரர்கள் ,பொதுவாக ஆசிய வேலைகரர்களுக்கு ஆங்கிலேயர்கள் வாய்த்த பெயர் (A historical term for manual labourers from Asia, particularly China and India, in the 19th century and early 20th century) .
ஓசியாக வாங்குவது என்பது தமிழக மக்கள் ஏன் அனைத்து நாட்டின் மக்களுக்கும் அலாதியான விருப்பம்தான். ஆனால் ஓசி என்பது தமிழ் வார்த்தைய என்று எண்ணும் போது அது ஆங்கிலமே என்ற உண்மை தடுக்கின்றது. Originalaka O.C என்பது ராணுவ மொழியில் officer command என்றே அர்த்தமாகும். ராணுவத்தில் உள்ள ஒபிசர் தனது வேலையாளிடம் வேலை சொல்வது ஓசி ஆனது. ஊக்கு என்பது நம்மக்கு மிக பரிச்சியமான ஒன்று ஆனால் அது Hook என்ற வார்த்தையில் இருந்தே வந்துள்ளது. எனக்கு தெரிந்து மதுரை வட்டாரத்தில் டோப்படிது போவது ன்பது வழக்கம். வண்டியில் பெட்ரோல் இல்லாவிட்டால் இப்படி செய்வது வழக்காமான ஒன்று . ஆனால் அது Tow என்ற வார்த்தையில் இருந்தே வந்துள்ளது. Tow என்றால் இழுப்பது என்பதே பொருள்.
Copy என்பதுமே தமிழாக மாறிவிட்டது.
இதை தவிர்த்து நீரைய வார்த்தைகள் தமிழில் நமக்கு அர்த்தம் தெரிந்தாலும் அதை நாம் ஆங்கிலத்திலே உபயோக படுத்துகிறோம் என்பதே உண்மை. matter , watch , cement , chair , bus, ticket, tire, wire, doctor, conductor ,driver ,seat,car, auto,cycle, busstop,busstand, etc.
ஆங்கிலத்தை அழகாக தமிழ் ஆக்கம் ஆக்கிய நாம் (Computer = கணினி, internet = இணையத்தளம் ) போன்ற நிறைய ஆங்கிலத்தை தமிழாக ஏன் இங்கிலீஷ்யை ஆங்கிலமாக ஆகிய நாம் தமிழில் தடுமாறி வருகிறோம் என்பதே உண்மை. ஆங்கிலேயர்கள் 200 வருடம் ஆண்டுகள் நம்மை ஆண்டு நம் வாழ்வில் ஆங்கிலத்தை நம் மொழியில் ஆங்கிலத்தை புகுத்தி விட்டனர். தமிழ் மெல்ல சாக வில்லை . தமிழர்கள் ஆகிய நாம் சாகடித்து கொண்டிரிகொறோம் என்பதே உண்மை. ஆங்கிலத்தை தமிழாக மாற்றிய நாம் , தமிழில் ஆங்கிலம் புகுந்தது என்பதை ஒத்து கொள்ள மாட்டேன் என்கிறோம். Bus number சொல்லுங்கள் என்கிறோமே தவிர தமிழில் உரைக்கவில்லை.படிக்காத பாமரன் கூட சேர்ல(Chair) உட்காருங்க என்கிறானே தவிர தமிழ் இல்லை.
இதில் மிக பெரிய காமெடி (பாருங்க தமிழ் வரல ) என்வென்றால் நம் அரசியல் வாதிகள் தமிழ் தமிழ் என்று உரைத்து கொண்டே இருக்கிறார்கள் தவிர உறைகிறார்கள் அவளோதான். பாமாக நிறுவனர் ராமதாசிற்கு cement என்பதற்கு அர்த்தம் தெரியுமா என்று தெரியவில்லை. அரசியலுக்கு மன்னிக்கவும் வாசகர்களே. ஆக தமிழ் மக்களுக்கு ஆங்கிலம் எவள்ளவு இன்றியமையாதது என்பதை நாம் பேசும் வார்த்தைகளே கற்று கொடுக்கின்றது. இது தமிழில் மட்டுமா என்றால் இல்லை என்பதே என் கருத்து மட்டற்ற மொழிகளுக்கும் இதே நிலைதான்.
இதில் நாம் பெருமை கொள்ளும் விஷயமும் உண்டு . கட்டுமரம் catamaran ஆனது. கர்மம் karma ஆனது .
தமிழ் வளர்க்க போராடும் நம் மக்களுக்கு நிறைய குழப்பம் உள்ளது. Car யை மகிழுந்து ஆகிய நாம் நமது பெயர்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க அனுமதிக்க வில்லை.
என்னை பொறுத்தவரை ஒரு பெயர் சொல்லை ,பொது பெயரை தமிழில் இருந்தால் அது ஆங்கிலத்திலும் அதே பெயர்தான். ஆனால் நாம் மட்டும் அதை மொழி மாற்றம் செய்த உலக பெருமை கொள்கின்றோம். நமது அருமையான தமிழ் வார்த்தைகளை மறந்தும் விட்டோம் என்பதை நாம் மடமையோடு, தாழ்ந்த மனதோடு ஏற்று கொள்ள வேண்டிய உண்மை என்பதே மெய்.
தமிழை காப்பாற்ற வேண்டிய நம்மின் செயல்பாடுகள் : முடிந்தவரை தமிழின் பெருமைகளை நமது குழந்தைகளுக்கு சொல்லி தரவேண்டும். ஆங்கில வழி கல்வியோ தமிழ் வழி கல்வியோ தமிழின் முக்கியதுவத்தை நாம் அவர்கட்கு அறிவிக்க வேண்டும். முடிந்த வரை இலக்கணத்தை நாமமும் கற்று கொள்ள வேண்டும். தமிழுக்கு ஒரு பெருமை உள்ளது . விகுதி என்ற ஒன்று பாலிற்கு தகுந்தவாறு வேறு படும் . எடுத்து காட்டிற்கு அவன் வந்தான். அவள் வந்தாள். அது வந்தது என்ற வார்த்தைகளில் விகுதி மாறுகின்றது. ஆங்கிலத்தில் அவ்வாறு கிடையாது. he is coming, she is coming, it is coming என்று விகுதி மாறாமல் வரும். இது போன்ற விருத்தியான விஷயங்கள் தமிழில் நிறைய உண்டு (இது தவறென்றால் தமிழ் பேராசிரியர்கள் மன்னிக்க வேண்டும் )247 எழுத்துகள் இருக்கும மொழி 26 எழுத்துகள் இருக்கும் மொழியால் ஆட்கொள்ள பட்டு வருகின்றது. ஆங்கில மொழியை இப்போது கற்று கொள்ள வேண்டிய அவசியம் என்றாலும் நம் தாய் மொழியான தமிழ் மொழியை அழித்து கற்று கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
திருக்குறளை உலக பொதுமறை என்று ஏற்று கொண்ட உலகம் அந்த நூல் இருக்கும் மொழியை ஏற்று கொள்ள வில்லை. ஏன் நமது நாட்டில் கூட அது ஆட்சி மொழியாக இல்லாமல் போனது. அதற்கு நிறைய அரசியல் காரணம் இருந்தாலும் நம் மொழியின் தொன்மையை நாம் வேரூன்றி அழித்து கொண்டிருப்பதே உண்மை .
(குறிப்பு : முகப்பு புகை படத்திற்கு மன்னிக்கவும்)
மிகவும் அருமையான கட்டுரை....நன்றி சந்துரு..
ReplyDeleteWelcome
ReplyDelete