ஆடுகளம் -
வெற்றி மாறனின் இரண்டாவது படைப்பு. பொல்லதாவனில் கண்ட வெற்றியை இதிலும் கண்டிரிகிறார். தனுஷின் வெற்றி மற்றும் நடிப்பின் வரிசைலும் இந்த படம் பேச படும் .
Directed by | Vetrimaran |
---|---|
Produced by | Kathiresan |
Written by | Vetrimaran |
Starring | Dhanush Taapsee Pannu Kishore |
Music by | G. V. Prakash Kumar |
Cinematography | Velraj |
Editing by | Te. Kishore |
ஆரம்ப காட்சியில், இரவில் ஒரு வீட்டின் உள்ளே தனுஷ் கத்தியுடன் நிற்கின்றார் . கட் செய்தல் ஹீரோஇன் டாப்சி கை அறுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்ல படுகிறார் .ஆர்ப்பாட்டமே இல்லாமல் flash back ஆரம்பிகின்றது.ஏதோ ஒரு வேலையில் இரண்டு கோஷ்டிகள் சேவல் சண்டையில் ஈடுபடுகின்றனர். அது இரத்தினசாமீ மற்றும் பேட்டகாரன்நின் சேவல் சண்டை. தடை செய்ய பட்ட சண்டையில் போலீஸ் தலையீடு . ரத்தினசாமி ஒரு போலீஸ் காரர். தலை முறை தலை முறையாக சேவல் சண்டை விடுபவர். ஆனால் பேட்டை காரனிடம் மட்டும் தோற்று கொண்டிருப்பவர்.
பேட்டைகாரர் அவரின் சேவல் வளர்ப்பு தனி விதம். அவருடன் இருக்கும் துரை (கிஷோர்) , அயுப் (பெரிய கருப்பு தேவர்) ,கருப்பு (தனுஷ்) மூவரும் முக்கியமானவர்கள். பேட்டைகாரர் சேவல் சண்டையில் ஈடு படிருகும்போது போலீஸ்ஆல கைது செய்ய படுகிறார். பிறகு வெளியில் வரும் அவர் ரத்தினசாமி மற்றும் ஒரு பெரியவரிடம் பஞ்சாயத்தில் ஈடு படுகிறார் .இதற்கு நடுவே இரத்தினசாமியின் ஆட்கள் பெடைகரனின் சேவலை திருடி விடுகின்றனர் . அதை மறுபடியும் எடுக்க போகும்தனுஷ் டாப்சியின் வீட்டில் அதை கண்டெடுக்கிறார் . டாப்சியை பார்த்த உடன் காதல் கொள்கிறார். அதை பேட்டைகரரிடமும் தெரிவிக்கிறார் . துறைக்கும் மற்றும் அவரது சககளுகும் தெரியும் இந்த காதல் தனுஷிடம் வேரூன்றி வளர்கின்றது . நடுவே தனுஷின் காதல் காட்சிகளுடன் நகர்கின்றது. பேட்டைகாரர் ரதினசமியிடம் பந்தயம் வைக்கிறார் . சேவல் சண்டை ஆரம்பம். எல்லா பேட்டைகாரர் சேவலும் ஜெய்கின்றது . ரத்தினசாமி பெங்களூர் சேவலை பந்தயத்தில் இறகுகின்றார் . தொலைந்து போன சேவலை வைத்து தனுஷ் ஜெய்கின்றார் . அதை [பார்த்து பேட்டைகாரர் பொறாமை கொள்கின்றார்.
Interval
அதற்கு பிறகு பேட்டைகரரிரின் பொறாமை காட்சிகள் , தனுஷின் காதல் கட்சிகள் என கதை நகர்கின்றது . பேட்டைகாரர் ,துரை மற்றும் தனுஷிடம் பகையை வளர்கின்றார். முடிவில் பெட்டைகரர் இறகின்றார் . flash back உம முடிஹின்றது. முடிவை திரை காண்க .
விமர்சனம் :
வெற்றிமாறனின் பெயருக்கு தகுந்தார் போல வெற்றியும் பெற்றுவிட்டார் . பேட்டைகாரனாக வரும் ஜெயபால் நடிப்பில் நன்றாகவே செய்து இருகிரிரர் .தனுஷ் தனது நடிப்பில் அந்த பாத்திரமாகவே செய்து இருகிறார். கிஷோர்உம தனது பங்கிற்கு நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். தனுஷின் நண்பராக வரும் ஊளை படத்தில் மதுரைகாரராகவே செய்துள்ளார். மதுரையை சுற்றியே நமது தமிழக சினிமாக்கள் தற்போது வளம் வருகின்றது. அதில் மதுரையில் இருக்கும் அனைவரும் படிபரிவுளும் உலகரிவிலும் கம்மி என்பது போலே சினிமாக்கள் ஒரு மாயை தோற்றத்தை உண்டாக்கி வருகின்றன. ஆடுகளமும் அந்த வரிசையை சேர்ந்தது என்றாலும் படத்தில் ஒரு thrill கிடைகின்றது. அடுத்து என ஆகும் என்பது போல காட்சிகள் நகர்கின்றன மதுரை பாஷையை சொதப்பாமல் பேசி நடிதிருகின்றனர் ஆர்டிஸ்டுகள் . தனுஷிற்கு பரவைலாமல் மதுரை பாஷை வருகின்றது. சேவல் சண்டை, களம் என்றாலும் மனிதனின் பாசம், காதல் , துரோகம், வன்மம் என்பதை பின்னி திர்ரைகதை பின்னி இருகிட்ரர் இயக்குனர். interval இல் முடிவை தந்திருக்கும் இயக்குனர் முடிவில் ஒரு punch யை குடிக்கவில்லை என்பதே உண்மை. மதுரை என்றாலே கைலி கட்டி திரியும் ஆசாமிகள் , rough ஆன மனிதர்கள் என்றே ஊடகங்கள் பதிவு செய்து வைத்து விட்டன இதில் ஆடுகளமும் விதிவிலக்கல்ல . இருந்தாலும் நல்ல கதை களத்தை தேர்ந்தெடுத்த இயக்குனர் வெற்றி மாறாமல் பெற்று விட்டார். ஜெயபாலுக்கு ராதாரவியின் பின்குரல் super (பிச்சுட்டார்). அவரது பின்குரளும் நடித்து இருகின்றது .. கிஷோர்க்கு சமுத்திரகனி பின்குரல் ஓட்ட வில்லை (கிஷோரீன் குரல் நமக்கு பர்ரிசயம் என்பதாலோ ஏனோ).
heroine டாப்சி நடிதிரிகிறார் (தமிழ் சினிமாவுக்கு ச்மபதமே இல்லாமல் ) . அவருக்கு பின் குரலான ஆண்ட்ரியாவின் குரல் suit ஆகி உள்ளது .பாத்திர படைப்புகள் அருமை. சேவல் சண்டை காட்சிகள் மெனகெட்டுஇருகின்றனர் பட குழுவினர் . கிராபிக்ஸ் மற்றும் திரை வடிவமைப்பில் முத்திரை பதித்துள்ளனர் .திரை கதையை நன்றாகவே வடிவமிதிருகும் இயக்குனர் முடிவை முடிக்காமல் விட்டு விட்டார்.(என்ன செய்வது என்று தெரியாமல் மற்ற படத்தின் முடிவும் இல்லாமல் இருக்க வேண்டும் என்று தாடியை சொரிந்து கொண்டே விட்டு விட்டார்) பாலு மகேந்திராவின் பட்டறையில் இருந்து மற்ற்றொரு இயக்குனர் . பாலுவின் drama சினிமா இல்லாமல் commercial சினிமாவை லாஜிக்ஓடு சொல்லும் ஒரு இயக்குனர். மென்மேலும் இவரிடம் இருந்து நல்ல களங்களை எதிர் பார்க்கலாம் என்பதே தமிழ் ரசிர்களின் ஆர்வம். காமெராவும் நன்றாகவே வேலை செய்து இருகின்றது . GV Prakashkumar இசை படத்திற்கு வலு சேர்கின்றது.(அவர் copy அடிப்பதை தவிர்க்க வேண்டும் ,இனைய தளம் அவரின் copy களை தெருவிகின்றது) . படத்தில் வில்லன் ஹீரோ என்ற பாத்திர படைப்பு இல்லாமல் இருப்பது ஆரோக்யமான ஒன்று . மொத்தத்தில் ஆடுகளம் பந்தயத்தில் வென்றுவிட்டது.
A Center::
புதிய களத்தை கண்ட A Center ரசிகன் முடிவில் படத்தை இயக்குனர் முடிக்க வில்லை என்றே கருதிகிறான். சேவல் சண்டையை படத்தில் மட்டுமே பார்த்து இப்படியும் இருக்குமோ என்று கருதிகிறான் . மறுபடியும் படத்தை பார்ப்பதில் அலாதி இன்பம் கொள்கிறான்.
B Center:
நல்ல படம் என்மதே இந்த வட்டாரத்தின் கருத்து . Bore அடிக்காம போகுது மாப்ள . என்று படம் பார்க்க போகிறவனிடம் உறைகின்றான். இடைவேளையை முடிவாக வைத்து இருக்கலாம் என்பதே B Center ரசிகர்களின் விருப்பம் .
C center:
C center க்கு நல்ல தீனி என்றாலும் படம் நிறைய இடத்தில அவனுக்கு bore அடிக்கவே செய்கின்றது. இரண்டம் பாதியில் வரும் திரைகதை முதல் பாதியை போல இல்லை என்பதே அந்த ரசிகர்களின் வருத்தம். இருந்தாலும் ஆடுகளம் அவர்களுக்கு ஆடும் களம்தான் .
ஆடுகளம் "உசுருக்கு சமமான பந்தயத்தில் வென்றுள்ளது "......
Comments
Post a Comment