Skip to main content

யுத்தம் செய்

யுத்தம் செய் :
 மிஸ்கின்னின் நான்காவது படம். நந்தலாலாவின் வெற்றிக்கு பிறகு வெளிவந்திருக்கும் படம். சேரன் அவரது இயக்கத்தில் அல்லாமல் ஹீரோவாக நடித்திருக்கும் 4 ஆவது படம்.
படம் வெளியான நாளும் 4/02/2011.

Cast:
Directed by Myshkin
Produced by Kalpathi S.Aghoram
Written by Myshkin
Starring
  •               Cheran as JK
  •               Dipa Shah as Thamizh
  •               Lakshmi Ramakrishnan
  •               Y. Gee. Mahendra as Dr. Purushothaman
  •                Jayaprakash as Dr. Judas
 Music by   K
Cinematography Sathya
Editing by Gagin
Studio
  •              AGS Entertainment
  •               Lonewolf Productions

 Plot: ஒரு மழை நேர இரவில் ஆட்டோ ஒன்று சாலையின்  ஓரத்தில் நின்று கொண்டிருப்பதை சிறுமி ஒருவள் தனது வீடு ஜன்னலின் வழியாக  பார்க்கிறாள். ஆட்டோ repair செய்து கொண்டிருப்பதை பார்த்து நடுவழியில் செல்லும்  பெண் தனக்கு ஆட்டோ கிடைக்கும் என்று விசாரிக்கிறாள். ஆட்டோவில் அமர்ந்திருக்கும் பெண்ணை பார்த்து அவள் மயக்கமான  நிலையில் இருக்கிறாள் என்று தெரிந்து ஆடோகாரரிடம் வினவுகிறாள் . ஆட்டோ வராது  என்று தெரிந்து நடந்து செல்கிறாள். அவளை துரத்தி கொண்டே ஆடோகாரர் ஓடுகின்றார்.
கட்
newyear celebration நடக்கின்றது , அங்கே நிற்கும் வண்டியில் ஒரு அட்டை பெட்டி வைக்கப்பட்டு இருக்கின்றது . சற்று நேரத்தில் அந்த பெட்டியை சுற்றி போலீசார் குவிகின்றனர் .  -டைட்டில்-  அதே போல் ஒரு பூங்காவிலும் ஒரு பெட்டி கண்டெடுக்க படுகின்றது.

தங்கை தொலைந்து போன சோகத்தில் இருக்கும் CBCID ஆன சேரனிடம் "பெட்டி கேஸ் "
ஒப்படிக படுகின்றது. அந்த பெட்டியில் இருக்கும் வெட்ட பட்ட கைகளை பற்றி  DR. ஜூடாஸ்(ஜெயப்ரகாஷ்) உதவியுடன் சேரன் துப்புகளை கண்டுபிடிக்கிறார். இடை இடையே தன தங்கை காணாமல் போனதை பற்றியும் அறிய முற்படுகிறார். அந்த கேஸை எப்படி சேரன் கண்டுபிடிதிருகின்றார் ,தங்கை காணமல் போனதுக்கு ஏதும் சம்பந்தமா என்பதை மர்மத்தோடு தன பாணியில் கதை சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

முடிவை திரையில் காண்க.




விமர்சனம்: A Typical Mysskin Film.  ஒவ்வொரு இயக்குனரும் பல வித்தியாசமான  subject எடுத்து இருந்தாலும் அவர்குக்கென்று ஒரு ஸ்டைல் உண்டு. அந்த வரிசையில் மிஸ்கின் ஒரு தரமான Crime Drama  இயக்கிருகின்றார் . சேரனும் தனது பங்களிப்பை நன்றாகவே செய்து  இருகின்றார். ஆனால் இனமும் தனது "அம்மு குட்டி", "ஏன்டா செல்லம்" போன்ற கண்ட்ராவி  expressions தவிர்க்க வேண்டும்.  Dr ஜூடாசக வரும் ஜெயப்ரகாஷ் அத கேரக்டர் ஆகவே வாழ்ந்து இருகின்றார். இதில் ஒய்.ஜி . மகேந்திரனின் மனைவியாக நடித்து  இருப்பவர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன். (நான் மகான் அல்ல , பாஸ் என்கின்ற பாஸ்கரன் படங்களில் ஹீரோ அம்மா) . அவர் மொட்டை அடித்து நடித்து இருப்பதை பாராட்டியே ஆக வேண்டும். படங்களில் வரும் அனைவருக்குமே பாராட்டுகள் பொய் சேர்ந்தாலும். படத்தின் Quality வெளியே தெரிய வைத்திருப்பது கேமரா மேன் சத்யாவும் இசை அமைப்பாளர் கேயும் தான். இருவருமே புதியவர்கள் . அவர்களை தனது பானிகே பயன் படுத்தி இருபது இயக்குனரின் புத்திசாலிதனம். அவர் அஞ்சாதேவின் சாயல் தெரியாமல் இருக்க வேண்டும் என்று நினைத்தால் என்னவோ ஹீரோ வை  C.B.C.I.D officer  ஆக்கி  இருகின்றார். படத்தின் இடையே ரசிகர்களுக்கு ஈசன் படத்தின் சாயல் தெரிவது போல் ஒரு மாயை உண்டாவதை தவிர்க்க முடியவில்லை.  தனது ஆஸ்தான கேமரா மேன் மகேஷ் முத்துசாமி இந்த படத்தில் மிஸ்ஸிங். அதனால்தானோ என்னவோ கடைசி காட்சியில் அந்த சிறுவனின் பெயரை முத்துசாமிஎண்டு மாற்றி விட்டார். படத்தில் துப்பறிவு காட்சிகள் மிகவும் யதார்த்தமாகவே இருந்தது. படத்தின் திரை கதை அதற்கு மிகவும் உதவி செய்து இருகின்றது. படத்தின் இரண்டாவது பாதி எனவோ கொஞ்சம் போர் அடிக்கவே செய்தது.நடுவில் வரும் அமீர் மற்றும் நீடு சந்திராவின் குத்து பாட்டு அவசியம்தானா என்பது தெரியவில்லை . பழி வங்க இருக்கும் குடும்பத்தினர் அனைவரும் மொட்டை அடித்து கொண்டு ஒரே "கருப்பு அங்கி" அணிய வேண்டும் என்பது அவசியம்தானா என்பதை இயக்குனர் தெரிவிக்க வேண்டும். படம் கொரியா மொழியில் வந்த நோ மெர்சி என்பதின் பதிப்பு என்று சில பேர் சொன்னாலும் மிஸ்கின் தனது இயக்கத்தில் படத்தை நன்றாகவே செய்து இருக்கிறார் என்பதே உண்மை. சிறு சிறு குறைகள் இருந்தாலும் யுத்தம் செய் பார்க்க வேண்டிய படம்.

A Center :
கண்டிப்பாக A class ரசிகர்களுக்கு தீனி போடும் படம்தான் இது. படம் ஆரம்பம் முதல் முடிவின் வரை சீட்டின் நுனியில் உட்காரவைதிரோது இயக்குனரின் சாமர்த்தியம்


B Center :
படம் இந்த வட்டாரத்திற்கு  பிடித்தமானது என்றாலும் சில சமயம் மெதுவாக நகர்கின்றது என்றே கருதுகின்றனர்.திரை அரங்கை வ்விட்டு வெளியே வந்த பிறகும் படம் நன்றாக இல்லை ,நல்ல இருக்குது என்ற இரு கருத்துகள் ரசிகர்கள் மத்தியில் உலா வருகின்றது.

C Center :
படத்தின் ஒபெனிங் முதலிலே இந்த வட்டாரத்திற்கு போர் அடிக்கவே செய்கின்றது. இருந்தாலும் படம் சில பேருக்கு பிடிக்கவே செய்யும். அமீரின் குத்து பாட்டில் இந்த வட்டாரம் விசில் அடிக்கவே செய்து இருகின்றது. அந்த பாடும் இந்த வட்டாரதிக்கே சேர்க்க பட்ட பாடல் என்றே கருத வேண்டும்.

யுத்தம் செய் - வென்றது யுத்தத்தில் 














Comments

Popular posts from this blog

Siruthai Vimarsanam

சிறுத்தை -  தமிழில் ஹீரோக்கள் வெற்றி formula வாக வைத்திருக்கும் dual role subject.   கார்த்தி கிட்டத்தட்ட வெற்றியும் பெற்று விட்டார் என்றுதான் கொளவேண்டும் . தெலுங்கில் வெற்றி பெற்ற விக்ரமகாடு(( Dubbed into malayalam as vikramathithya and Hindi as Pratighat ) வை ரீமேக் செய்து வெற்றியும் கண்டு இருகிண்டிறனர். இது கார்த்தி யின் 5 அவது படம் .  நான் மகான் அல்ல வெற்றிக்கு பிறகு வெளி வந்திருக்கும் படம். Cast: Karthi Tamannaah Bhatia Santhanam Avinash Rajiv Kanakala Music : Vidya sagar Cinematography : Vel raj Editing : Vinayan Direction : siva Producer : Gnanavel raja.  Plot : கதைக்கு (வழக்கம்தான் ) வருவோம் . முதல் சீனில் வில்லன் பாவுஜிக்கு தனது சகாவிடம் இருந்து போன் வருகிறது . ரத்தினவேல் பாண்டியன் சாகவில்லை  உயிரோடுதான் உள்ளார் என்று. போன் செய்த சகா ஒரு மர்மமான மனிதரால் கொல்ல படுகிறார் .கார்த்தியின் (ரத்தினவேல் பாண்டியன்) சமாதிக்கு சென்று பிரேதத்தை தேடுஹின்றனர் கிடைக்கவில்லை. (வழக்கமான villan expression on that scene). Cut நமது ராக்கெட் ராஜாவின் introducing.  அவர் தன

தமிழில் ஆங்கிலம்

தொய்மையான தமிழ் மொழி. செம்மொழி , கல் தோன்றி மண் தோன்றா காலத்தே தோன்றிய  மூத்த மொழி. லடினுகும் ,சமஸ்க்ரிததுகும் மூத்த மொழி என்ற பெயர் பெற்றது. மற்ற நாடுகளில் மொழி பேசும் முன்பு பாடலும் பண்ணும் பேச ,பாட  பெற்ற  மொழி என்ற பெருமையும் உண்டு. தற்போது தமிழின் நிலைமை எவ்வாறு உள்ளது என்பதே நமது கேள்வி. இப்போது நான் எழுதும் தமிழ் கூட சரியானதுதானா என்பது என் சந்தேகம் .தேவன்ன்கிரி script என்று ஒன்று உண்டு. அது வழக்கில் உள்ளதா  என்பதே கேள்விகுறி . சரி நாம் தலைப்புக்கு வருவோம் .தமிழில் ஆங்கிலம் . ஆங்கிலம் என்ற வார்த்தை தமிழ்தான். ஆனாலும் எத்தனை  வார்த்தைகள் தமிழில் தலையீட்டி உள்ளது என்பதை நாம் அறிவோமா ? நமது தமிழில் குவளை என்ற அழகான தமிழ் வார்த்தை உள்ளது. ஆனால் தற்போது அது டிப்பர் (dipper) என்றே உரைக்க பட்டு வருகின்றது. மதுரை வழக்கத்தில் அசால்ட் என்ற வார்த்தை உள்ளது  அதற்கு அர்த்தம் லேசானது அல்லது சுலபமானது என்று கொள்ளலாம் . அது assault என்ற ஆங்கில வார்த்தையில் இருந்து வந்தது. அதற்கு அர்த்தம் தாக்குதல் என்றே அர்த்தமாகும். கூலி என்றொரு வார்த்தை உண்டு ஆனால் அது தமிழ் வார்த்தை அல்ல என்பது நிறைய பேர

விஜய் - அரசியல் பிரேவேசம்

தமிழக அரசியல் வரலாற்றை நாம் திரும்பி பார்க்கும் போது தமிழ் சினிமா அதோடு பின்னி பிணைந்து இருகின்றது. இது வரை 4 முதல் அமைச்சர்களை தந்திருக்கும் தமிழ் சினிமா , நமக்கு MLA  மற்றும் MP போன்றவர்களையும் தந்து இருகின்றது . அண்ணா, எம். ஜி. ஆர், கருணாநிதி (கலைஞர் என்று தன்னை அழைத்து கொள்வர் ), ஜெயலலிதா  என்று முதல் அமைச்சர்களை தந்து இருக்கும் தமிழக மக்களின் வாழ்வில் தமிழ் சினிமா நீண்ட நாட்களாக இடம் பெற்று இருகின்றது. தற்போது விஜயகாந்தும் தனது பங்கிற்கு அரசியலில் ஈடுபட்டு கொண்டிரிகிறார் . அந்த வரிசையில் நமது இளையதளபதி விஜய் தனது அரசியல் வாழ்கையை தொடங்கவிருக்கிறார் . தனது சினிமா வரலாற்றில் கிட்டத்தட்ட ரஜினியை பின்பட்ட்ரும் விஜய் , தனது படங்களில் commercial மசாலாவை தூவி  Box Office இல் நீண்ட நாளாக எடம் பெற்று வருபவர். ஆனால் சமீப காலங்களில் அவருக்கு இந்த வெற்றி பார்முலா வெற்றியை அளிக்கவில்லை. 2 ஆண்டுகளுக்கு முன்பு தயாநிதி மாறனின் அழைப்பை ஏற்று ஸ்டாம்ப்  release  செய்தவருக்கு தற்போது தனது 51 ஆவது படமான காவலனை ரிலீஸ் செய்வதில் தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் தனது அரசியல் பிரேவேசமே என்று தற