Skip to main content

விஜய் - அரசியல் பிரேவேசம்

தமிழக அரசியல் வரலாற்றை நாம் திரும்பி பார்க்கும் போது தமிழ் சினிமா அதோடு பின்னி பிணைந்து இருகின்றது. இது வரை 4 முதல் அமைச்சர்களை தந்திருக்கும் தமிழ் சினிமா , நமக்கு MLA  மற்றும் MP போன்றவர்களையும் தந்து இருகின்றது . அண்ணா, எம். ஜி. ஆர், கருணாநிதி (கலைஞர் என்று தன்னை அழைத்து கொள்வர் ), ஜெயலலிதா  என்று முதல் அமைச்சர்களை தந்து இருக்கும் தமிழக மக்களின் வாழ்வில் தமிழ் சினிமா நீண்ட நாட்களாக இடம் பெற்று இருகின்றது.
தற்போது விஜயகாந்தும் தனது பங்கிற்கு அரசியலில் ஈடுபட்டு கொண்டிரிகிறார் . அந்த வரிசையில் நமது இளையதளபதி விஜய் தனது அரசியல் வாழ்கையை தொடங்கவிருக்கிறார் . தனது சினிமா வரலாற்றில் கிட்டத்தட்ட ரஜினியை பின்பட்ட்ரும் விஜய் , தனது படங்களில் commercial மசாலாவை தூவி  Box Office இல் நீண்ட நாளாக எடம் பெற்று வருபவர். ஆனால் சமீப காலங்களில் அவருக்கு இந்த வெற்றி பார்முலா வெற்றியை அளிக்கவில்லை. 2 ஆண்டுகளுக்கு முன்பு தயாநிதி மாறனின் அழைப்பை ஏற்று ஸ்டாம்ப்  release  செய்தவருக்கு தற்போது தனது 51 ஆவது படமான காவலனை ரிலீஸ் செய்வதில் தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் தனது அரசியல் பிரேவேசமே என்று தற்போது  உணர்ந்துள்ளார். திமுக வின் செல்ல பிள்ளையாக வளம் வந்த விஜய்க்கு ராகுலின் சந்திப்பிற்கு பிறகு திமுகவிடம் இருந்து சரியான ஆதரவு கிட்டவில்லை. கடந்த 2 படங்களை வாங்கிய சன் பிக்ட்சர்ஸ்உம காவலனை வாங்க தயக்கம் காண்பித்தே வந்தது. காவலனை ரிலீஸ் செய்ய தடைகளை மறைமுகமாகவும் ஏற்படுத்தி உள்ளது. இதே நன்கே உணர்ந்த விஜய் தனது அரசியல் பிரவேசத்தை பற்றி யோசிக்க ஆரம்பித்து இருப்பார்.
 நம் இந்திய தேசத்தை பொறுத்தவரை அரசியலில் யார்வேண்டுமானால் ஈடுபடலாம் என்பதே விளக்க கோட்பாடு. அந்த வரிசையில் விஜய் அரசியலுக்கு வருபதை யாரும் தடையாக என்ன மாட்டார்கள். ஆனால் இது சரியான தருணம்தான என்பதை விஜய் யோசிக்க வேண்டும். மற்றவர்களை போல அல்லாமல் விஜய்க்கு சினிமா கவர்ச்சி என்பது உள்ளது. தமிழக அரசியல் வரலாற்றில் இந்த சினிமா கவர்ச்சியை வைத்து கொண்டு ஜெயய்தவர்கள் ஏராளம். ஆனால் அது மட்டுமே ஒரு  தகுதியாக போதுமா என்பதை விஜய் யோசிக்க வேண்டும. விஜயகாந்தும் சினிமா கவர்ச்சியை உபயோக படுத்தி இருந்தாலும் நிர்வாக திறமையும் நிருபித்து இருப்பவர். தான் தென்னிந்திய நடிகர் சனக தலைவராக இருந்த பொழுது சங்கத்தின் கடனை அடித்தார். நலிந்த கலைங்கர்களுக்கு ஓய்வூதியத்திற்கு ஏற்பாடு செய்தார் . அது மட்டுமல்லாமல் நடிகர் சங்கத்தின் வைப்பு நிதியாக ஒரு கோடிக்கும் மேல் ஏற்பாடு செய்துள்ளார். இருந்தபோதும் அவரின் கட்சி கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறவில்லை. அதற்கு நிறைய காரணங்கள் இருந்தாலும் கட்சியை சேர்ந்த எந்த வேட்பாளரும் தொகுதி மக்களுக்கு பரிச்சியம் இல்லை என்பதே உண்மை. அதே போல விஜயும் தனது அரசியல் வாழ்வை யோசித்து ஆரம்பிக்க வேண்டும். அகல கால் வைக்காமல் தவிர்க்க வேண்டும். தனது ரசிகர்மன்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றி இருக்கும் இவர் தனது முதல் முயற்சியை தொட்டுள்ளார்.

.
 சமீபத்தில் NDTV இல் பேட்டி கொடுத்திருக்கும் விஜயும் தனது அரசியல் பிரெவேசம் தற்போது இருக்காது என்பதை சுட்டி கட்டி உள்ளார்.
(பார்க்க : http://www.ndtv.com/video/player/ndtv-special-ndtv-24x7/vijay-on-kaavalan-s-release-joining-politics/189314 ) 
 1996  இல் ரஜினி அரசியலில் ஈடு படுவார் என்றுதான் தமிழகம் எதிர் பார்த்தது. ஆனால் அவர் தற்போதும் முடிவை எடுக்க முடியாமல் தடுமாறி வருகிறார் .1996 நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தா.மா.கா கூட்டணி வெற்றி பெற ரஜினியின் ஆதரவும் ஒரு பங்கு வகித்தது. அப்போதே அவர் சரியான முறையில் காய்களை நகர்த்தி இருந்தால் தற்போது அவரும் அரசியல் எனும் மகுடத்தில் மின்னி இருக்கலாம். ஆனால் அவரின் வழி யாருக்கும் அறியாத ஏன் அவருக்கே அறியாத ஒன்று. அவரை தொடர்ந்து விஜயும் அந்த மாதிரி சந்தர்பங்கள் அமைந்தால் அதை தக்க வைத்து கொண்டு  utilize  பண்ண வேண்டும் என்பதே என்னுடைய கருத்து .
 தனது சினிமா கவர்ச்சியை நம்பாமல் நிர்வாக திறமையை அவர் நிருபித்து காண்பிக்க வேண்டும். சமூக நலனில் அக்கறை கொண்ட அமைப்புகள் தொடங்கலாம். அதன் மூலம் வெற்றிகரமான project கல் உருவாக வேண்டும். இதை அவர் சினிமா நடித்து கொண்டே செய்யலாம். சினிமாவில் முழு வெற்றியையும் பெற வேண்டும் . பிறகு அரசியலை எதிர் கொள்ளலாம். தற்போது 36 அகவையில் இருக்கும் விஜய் அரசியல் அனுபவங்களை ஏற்படுத்தி கொண்டு பிறகு அரசியலில் இறங்கலாம். இதே போன்ற பல்வேறு முயற்சிகளில் வெற்றி பெற்றால் அரசியலில் வெற்றி பெறுவார் என்பதே திண்ணம்.

அதே போல வரும் சட்டமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு யாருக்கு எதிர்ப்பு என்பது போலான மடத்தனமான stunt களை விட்டுவிட்டு சமூக நலன் அக்கரையில் ஈடு படவேண்டும. முதலில் சினிமாக்களில் உள்ள வழக்கங்களை ஒழித்து படம் பண்ண வேண்டும். எதிர் காலத்தில் அரசியல் வழக்கங்களை ஒழித்து விட்டு அரசியல் பண்ணுமாறு கேட்டுகொள்கிறோம்.
 

Comments

  1. இப்ப என்ன சொல்ல வர உன்ன அரசியழ நிக்க வைக்கணும் நு சொல்றிய ?


    - நான்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

உலக கோப்பை அணியில் தமிழர்கள்

  இது வரை 8 உலக கோப்பைகள் நடந்துள்ளன . அதில் இந்தியா ஒரு முறை ( 1983, England) வென்றுள்ளது. இது வரை நடந்த உலக கோப்பை வரலாற்றில் தமிழகத்தை சேர்ந்த 7 பேர் பங்கெடுத்துள்ளனர் . தற்போது 7 ஆவதாக தமிழக வீரர் அஸ்வின் பங்கெடுத்துள்ளார். அந்த 7  பின் வருமாறு : ஸ்ரிநிவாசரகவன்   வெங்கடராகவன்( 1975,1979) க்ரிஷ்ணமச்சரி ஸ்ரீகாந்த் ( 1983 , 1987, 1992)      லக்ஷமணன் சிவராம கிருஷ்ணன் ( 1987)   சடகோபன் ரமேஷ்( 1999)  ராபின் சிங்( 1999)   தினேஷ் கார்த்திக்( 2007)   ரவிச்சந்திரன்   அஸ்வின்   (2011) இந்த தமிழக வீரர்கள் பட்டியலில் ஸ்ரீகாந்த் மட்டுமே அதிக பட்சமாக மூன்று உலக கோப்பைகளில் விளையான்டுள்ளார் . அதில் ஒரு உலக கோப்பை வென்றது இந்திய அணி . 1. ஸ்ரீனிவாசன் வெங்கட்ராகவன் : இவர் 21 April 1945  இல் பிறந்தவர் .   1965 to 1983  வரை இந்திய அணியில் விளையாடினர் . முன்னால் கேப்டன் ஆன இவர் பிறகு அம்பயர் ( 1993 - 2004) ஆக செயல்பட்டு வந்தார். பின்னர் அதிலிருந்தும் விலகி விட்டா...

யுத்தம் செய்

யுத்தம் செய் :  மிஸ்கின்னின் நான்காவது படம். நந்தலாலாவின் வெற்றிக்கு பிறகு வெளிவந்திருக்கும் படம். சேரன் அவரது இயக்கத்தில் அல்லாமல் ஹீரோவாக நடித்திருக்கும் 4 ஆவது படம். படம் வெளியான நாளும் 4/02/2011. Cast: Directed by Myshkin Produced by Kalpathi S.Aghoram Written by Myshkin Starring               Cheran as JK               Dipa Shah as Thamizh               Lakshmi Ramakrishnan               Y. Gee. Mahendra as Dr. Purushothaman                Jayaprakash as Dr. Judas  Music by   K Cinematography Sathya Editing by Gagin Studio              AGS Entertainment     ...